பட்டர் பாதுஷா
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. அரிசிமாவு - 200 கிராம் (பச்சரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து, ஊறிய பின் ஈரம் போக துணியில் உலர வைத்து நல்ல மிருதுவான மாவாக அரைத்து, சலித்து வைத்தால் நல்லது)
2. வெண்ணெய் - 100 கிராம்
3. சர்க்கரை - 500 கிராம்
4. எண்ணெய் - 300 மி.லி
செய்முறை:
1.சர்க்கரையை மிக்ஸியில் அரைத்து மிருதுவாக்கிக் கொள்ளவும்.
2. இலேசான ஈரத்துடன் இருக்கும் அரிசி மாவுடன் வெண்ணெய் கலந்து பிசைந்து தடிமனான வட்டமாகச் செய்து கொள்ளவும்.
3. அதைக் காய வைத்த எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்.
4. பொரித்தெடுத்து சூடாக இருப்பதை அப்படியே சர்க்கரைத் தூளில் புரட்டி எடுக்கவும்.
குறிப்பு:இதில் நடுவில் அழகுக்காக செர்ரி பழம் வைத்தால் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.