கிராமத்துக் கமர்கட்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. தேங்காய்த் துருவல் - 1 கப்
2. வெல்லம் - 3/4 கப்
3. நல்லெண்ணெய் - 1/2 தேக்கரண்டி.
செய்முறை:
1. தேங்காய்த் துருவலை தண்ணீர் சேர்க்காமல் ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும்.
2. ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டுச் சிறிது நீர் விட்டுக் கரையவிட்டுக் கொதிக்க வைக்க வேண்டும்.
3. கொதித்த வெல்லப்பாகை வடிகட்டி, மீண்டும் அடுப்பில் ஏற்றிக் கொதிக்க விடவும்.
4. கொதிக்கும் வெல்லப்பாகுடன் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து நன்கு சுருள வதக்கவும்.
5. கடைசியாக எண்ணெய் சேர்த்துக் கலவை நன்கு முற்றிய நிலையில் இறக்கவும்.
6. இக்கலவை ஆறிய பின்பு, சிறிய நெல்லிக்காய் அளவில் உருண்டைகள் பிடித்து வைக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.