பூந்தி லட்டு
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. கடலை மாவு- 2 கப்
2. சர்க்கரை – 2 கப்
3. நெய் – 3 தேக்கரண்டி
4. ஏலக்காய்த் தூள் – 1/4 தேக்கரண்டி
5. உடைத்த முந்திரி – 1/2 தேக்கரண்டி
6. உலர்திராட்சை – 1/2 தேக்கரண்டி
7. எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
1. கடலை மாவுடன் சிறிது தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்குக் கரைக்கவும்.
2. வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் காய வைக்கவும்.
3. எண்ணெய் நன்கு காய்ந்ததும், பூந்திக் கரண்டியை காயும் எண்ணெய்யின் மேலாகப் பிடித்து சிறிதளவு கடலைமாவுக் கலவையை அதில் ஊற்றிப் பூந்திகளைப் பொரித்தெடுக்கவும்.
4. மற்றொரு பாத்திரத்தில் சர்க்கரை, 3/4 கப் தண்ணீர் சேர்த்து பாகு போல் காய்ச்சவும்.
5. ஒரு வாணலியில் நெய் ஊற்றி, அதில் உடைத்த முந்திரி, உலர்திராட்சையைப் பொரித்து, அதை சர்க்கரைப் பாகில் கலக்கவும்.
6. பாகு சூடாக இருக்கும் போதே பொறித்த பூந்தியைப் போட்டுக் கலக்கவும்.
7. கையில் நெய்யைத் தடவிக் கொண்டு, கை பொறுக்கும் சூட்டில் பூந்தியை லட்டுகளாக உருண்டை பிடித்துப் பயன்படுத்தலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.