மைதா அப்பம்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. மைதா மாவு – 1 கப்
2. ரவை – 2 மேசைக்கரண்டி
3. வெல்லம் (பொடித்தது) – 1/2 கப்
4. வாழைப்பழம் – 1 எண்ணம்
5. எண்ணெய் – தேவையான அளவு
6. உப்பு – 1 சிட்டிகை.
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தவிர, மீதியிருக்கும் அனைத்துப் பொருட்களையும் போட்டுக் கலந்து, தண்ணீர் விட்டுத் தோசை மாவு பதத்துக்கு கரைத்து அப்படியே அரை மணி நேரத்திற்கு மூடி வைக்கவும்.
2. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், மாவை ஒரு சிறு கரண்டியால் எடுத்துச் சூடான எண்ணெயில் நன்றாக வேகவிட்டு எடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.