பாதாம் அல்வா
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. பாதாம் பருப்பு – 1 கப்
2. முந்திரிப் பருப்பு – 10 எண்ணம்
3. சர்க்கரை – 1 கப்
4. நெய் – 1/2 கப்
5. ஏலக்காய் – 3 எண்ணம்
6. ஜாதிக்காய்த் தூள் - சிறிது
7. குங்குமப் பூ - சிறிது
8. கேசரிப் பொடி - சிறிது
9. வெள்ளரி விதை – 1 மேசைக்கரண்டி.
செய்முறை:
1. பாதாம் பருப்பை வெந்நீரில் 10 நிமிடம் ஊறவைத்துத் தோலுரித்துக் கொள்ளவும்.
2. முந்திரிப் பருப்பை தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும்.
3. இரண்டு பருப்புகளையும் சிறிது தண்ணீர் சேர்த்து மென்மையான விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
4. ஒரு வாணலியில் சர்க்கரையுடன் அரை கப் தண்ணீர் சேர்த்துக் காய்ச்சவும்.
5. சர்க்கரை கரைந்ததும், அரைத்த விழுதையும் சேர்த்துக் கைவிடாமல் கிளறவும்.
6. சர்க்கரையும், விழுதும் சேர்ந்து வரும்போது 1 மேசைக்கரண்டி பாலில் குங்குமப்பூ, கேசரிப் பொடி, ஏலப்பொடி, ஜாதிக்காய்ப் பொடி, குங்குமப்பூ ஆகியவற்றைக் கலவையில் சேர்க்கவும்.
7. கலவை இறுக ஆரம்பித்ததும் சிறிது சிறிதாக நெய் சேர்த்துக் கிளறவும்.
8. நெய் வெளியில் வந்து ஒட்டாமல் கலவை வரும் போது, அடுப்பிலிருந்து இறக்கி வெள்ளரி விதையைக் கலக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.