அசோகா அல்வா
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. பாசிப்பருப்பு - 1 கப்
2. கோதுமை மாவு - 1/4 கப்
3. சர்க்கரை - 1 கப்
4. நெய் - 1/2 கப்
5. முந்திரி - 10 எண்ணம்
6. ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி
7. கேசரிப் பொடி - சிறிது.
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் பாசி பருப்பை இரு மடங்கு தண்ணீர் சேர்த்து நன்றாக வேகவைத்துத் தண்ணீரை வடித்து வைக்கவும்.
2. மிதமான நெருப்பில் வேகவைத்த பாசிப்பருப்புடன் கோதுமை மாவு, சிறிது நெய் சோ்த்துக் கட்டிப்படாமல் கிளறவும். தேவையெனில் சிறிது சுடுநீரைச் சேர்த்துக் கொள்ளவும்.
3. நன்றாக கலந்த பின் சர்க்கரையைச் சேர்த்து நன்றாக கரையும் வரை கிளறி விடவும்.
4. கேசரிப்பொடி சேர்த்துக் கலக்கவும்.
5. பின் ஒரு வாணலியில் நெய் ஊற்றி, அதில் முந்திரிப்பருப்பை வறுத்துக் கலக்கவும்.
6. கடைசியாக ஏலக்காய்த்தூள் தூவி இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.