ஓமப்பொடி
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. கடலை மாவு – 1/2 கிலோ
2. அரிசி மாவு – 1/4 கிலோ
3. ஓமத்தண்ணீர் – 1/4 லிட்டர்
4. லெமன் கலர் பொடி – 1/4 தேக்கரண்டி
5. பெருங்காயத்தூள் – 1தேக்கரண்டி
5. உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, லெமன் கலர் பொடி, உப்பு சேர்த்து, அதில் பெருங்காயத்தூள் கலந்த தண்ணீர் ஊற்றிக் கலக்கவும்.
2. பின்னர் அதில் ஓமநீரை ஊற்றி அனைத்தும் ஒன்று சேரும்படியாகப் பிசைய வேண்டும்.
3. பின்னர் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து மாவினை மிகவும் இளக்கமாக இல்லாதவாறு பிசைந்து கொள்ள வேண்டும்.
4. முறுக்கு பிழியும் எந்திரத்தில் ஓமப்பொடி அச்சினைப் போட்டு, அதில் பிசைந்த மாவினை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
5. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் முறுக்கு அச்சிலிருந்து ஓமப்பொடியாகப் பிழிய வேண்டும்.
6. பிழிந்த ஓமப்பொடி வேகவும் எடுத்து எண்ணெய்யினை வடிகட்டிப் பயன்படுத்தவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.