ஆப்பிள் பக்கோடா
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. ஆப்பிள் - 1 எண்ணம்
2. கடலைமாவு - 1/2 கப்
3. அரிசி மாவு - 1/4 கப்
4. உப்பு - தேவையான அளவு
5. எண்ணைய் - தேவையான அளவு.
செய்முறை:
1. ஆப்பிளைத் தோல் சீவி துருவிக் கொள்ளவும்.
2. துருவிய ஆப்பிள், கடலைமாவு, அரிசிமாவு, உப்பு நான்கையும் ஒன்றாகக் கலந்து பிசைந்து வைக்கவும். (தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை)
3. ஒரு கடாயில் எண்ணைய் ஊற்றிக் காய்ந்ததும், பிசைந்து வைத்திருக்கும் மாவை சிறு சிறு பக்கோடாக்களாகப் போட்டுப் பொன்னிறமாக பொறித்து எடுக்கவும்.
குறிப்பு: இந்த பக்கோடாவைக் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.