ஆடிக்கும்மாயம்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. முழு வெள்ளை உளுந்து - 300 கிராம்
2. பச்சரிசி - 75 கிராம்
3. நெய் - 225 மி.லி
4. கருப்பட்டி - 250 கிராம்
5. சர்க்கரை - 250 கிராம்
செய்முறை:
1.உளுந்து, அரிசி ஆகியவற்றைத் தனித்தனியே சிவக்க மணம் வரும் வரை வறுக்கவும். ஆற வைத்து மாவு போல் அரைக்கவும்.
2. தண்ணீர் 300 மி.லி அளவு எடுத்து கருப்பட்டி, சர்க்கரை சேர்த்து நன்றாகக் கரைந்து விடும் வரை கொதிக்க வைக்கவும்.
3. கருப்பட்டி, சீனி கலந்த பாகுடன் மாவைச் சேர்த்து வைக்கவும்.
4. கனமான பாத்திரத்தில் நெய்யை விட்டு மாவை சேர்த்து கிளறவும்.
5. மிதமான நெருப்பில் வைத்து கையில் ஒட்டாமல் வரும்போது எடுத்து விடவும்.
குறிப்பு:இதில் வாசனைப் பொருட்கள் எதுவும் சேர்க்கத் தேவையில்லை.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.