புதினா பக்கோடா
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. புதினா - ஒரு கட்டு
2. சேமியா - 100 கிராம்
3. மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
4. வெங்காயம் - 2 எண்ணம்
5. உடைத்த முந்திரி - 1 மேசைக்கரண்டி
6. எண்ணெய் - தேவையான அளவு
7. கறிவேப்பிலை - சிறிது
8. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. புதினா, வெங்காயம் ஆகியவற்றைத் தனித்தனியாகப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
2. கொதிக்கும் நீரில் சேமியாவைப் போட்டு, வெந்ததும் வடித்து எடுத்து, குளிர்ந்த தண்ணீரில் அலசி வைக்கவும்.
3. ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் நறுக்கி வைத்திருக்கும் புதினா, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
4. வேகவைத்த சேமியாவுடன், வதக்கி வைத்த புதினா, வெங்காயம், முந்திரி, மிளகாய்த்தூள், உப்பு, கறிவேப்பிலை சேர்த்துக் கலந்து பிசைந்து கொள்ளவும்.
5. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் மாவைப் பக்கோடாக்களாகக் கிள்ளிப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.