ரவா கேசரி
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. ரவா – 100 கிராம்
2. சர்க்கரை – 150 கிராம் (தேவைக்கு)
3. நெய் – 50 கிராம் (தேவைக்கு)
4. முந்திரி – 5 எண்ணம்
5. திராட்சை – 5 எண்ணம்
6. ஏலக்காய் – 5 எண்ணம்
7. கேசரி பவுடர் – தேவையான அளவு.
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் ரவையை போட்டு அடுப்பில் வைத்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
2. ஒரு வாணலியில் நெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் முந்திரி, திராட்சை, ஏலக்காய் போட்டு வறுத்துக் கொள்ளவும்.
3. ஒரு பாத்திரத்தில் 3 டம்ளர் தண்ணீரை ஊற்றி அத்துடன் கேசரி பவுடரையும் சேர்த்து நான்கு கொதிக்க வைக்கவும்.
4. கொதித்த தண்ணிரில் ரவையைச் சேர்த்து நன்கு கிளறி விடவும்.
5. ரவை நன்கு வெந்ததும் சர்க்கரையை சேர்த்து கிளறிக் கொண்டே இருக்கவும்.
6. அதனுடன் நெய்யை சேர்த்து நன்கு கிளறி, வறுத்த முந்திரி, திராட்சை, ஏலக்காய் போட்டு இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.