மைதா மில்க் பர்பி
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. மைதா – ஒரு கப்
2. பால் – ஒரு லிட்டர்
3. சர்க்கரை – 3 1/2 கப்
4. நெய் – 3/4 கப்
5. ஏலக்காய்த்தூள் – 1/4 தேக்கரண்டி.
செய்முறை:
1. பாலைச் சுண்டக் காய்ச்சி கோவா பதத்தில் எடுத்துக் கொள்ளவும்.
2. அடி கனமான பாத்திரத்தில் நெய்யை ஊற்றிக் காய்ந்ததும், அதில் மைதா மாவைச் சேர்த்துப் பொன்னிறமாக வறுக்கவும்.
3. வறுத்த மாவைக் கீழே இறக்கி சிறிது நேரம் ஆறவிடவும்.
4. பின்னர் அதனுடன் கோவாவைக் கட்டியில்லாமல் உதிர்த்து நன்றாகக் கலந்து வைக்கவும்.
5. வேறொரு பாத்திரத்தில் சர்க்கரையைச் சேர்த்து, மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றிக் கொதிக்க வைக்கவும்.
6. சர்க்கரைப்பாகு இரட்டைக் கம்பியளவு பதம் வந்தவுடன் அதில் மைதாக் கலவை, ஏலக்காய்த்தூள் தூவி இரண்டு நிமிடம் கிளறி அடுப்பை அணைக்கவும்.
7. இப்போது பாத்திரத்தில் ஏடு போல் படிந்து இருக்கும்.
8. அந்தக் கலவையை மேலும் கொஞ்சம் கிளறி, நெய் தடவிய ஒரு தட்டில் கொட்டிப் பரவலாக்கவும்.
9. பிறகு தேவையான அளவில் துண்டுகள் போட்டுப் பரிமாறலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.