வெங்காய தூள் பக்கோடா
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. கடலை மாவு - 500 கிராம்
2. நல்லெண்ணெய் - 200 மி.லி
3. பல்லாரி வெங்காயம் - 600 கிராம்
4. சோடா உப்பு - 1/4 தேக்கரண்டி
5. மிளகாய் - 25 கிராம்
6. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. வெங்காயத்தை நீளவாக்கில் பொடியாக வெட்டவும்.
2. கடலை மாவு, உப்பு, சோடா உப்பு ஆகியவற்றுடன் வெட்டி வைத்திருக்கும் பல்லாரி வெங்காயம், மிளகாய் போன்றவற்றையும் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
3. வாணலியில் எண்ணெய்யைக் காயவைத்து பிசைந்து வைத்த மாவை உதிர்த்துப் போடவும்.
4. நன்றாக சிவந்த பின்பு எடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.