மிளகு துக்கடா
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. கோதுமை மாவு – 1 கப்
2. மைதா மாவு – 1 கப்
3. மிளகுத்தூள் – 3 தேக்கரண்டி
4. நெய் – 1/4 கப்
5. பெருங்காயத்தூள் – 1/2 தேக்கரண்டி
6. எண்ணெய் - தேவையான அளவு
7. உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
1. நெய்யுடன் உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
2. கோதுமை மாவு, மைதா மாவு, மிளகுத்தூள், பெருங்காயத்தூள் ஆகியவற்றுடன் உப்பு சேர்த்த நெய்யைச் சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு சப்ப்பாத்தி மாவைப் போல் பிசையவும்.
3. பிசைந்த மாவை மெல்லிய சப்பாத்தி போல் தேய்த்துக் கொள்ளவும்.
4. தேய்த்த மாவைக் கத்தியினால் குறுக்கு நெடுக்காக நீள்சதுர வடிவத் துண்டுகளாக வெட்டவும்.
5. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்தததும், அதில் வெட்டி வைத்திருக்கும் மாவுத் துண்டுகளைப் போட்டுப் பொரித்து எடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.