ஆந்திரா தட்டை
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. அரிசி மாவு – 2 கப்
2. மைதா - 1/4 கப்
3. கடலை மாவு - 1/2 கப்
4. வேர்க்கடலை – 2 மேசைக்கரண்டி
5. பொட்டுக்கடலை – 2 தேக்கரண்டி
6. சீரகம் - 1 தேக்கரண்டி
7. எள் – 1 தேக்கரண்டி
8. கறிவேப்பிலை – சிறிது
9. எண்ணெய் - தேவையான அளவு
10. உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
1. மேற்காணும் பொருட்களில் எண்ணெய்யைத் தவிர்த்து, அனைத்துப் பொருட்களையும் தேவையான தண்ணீர் விட்டுக் கெட்டியாகப் பிசைந்து தட்டைகளாக தட்டவும்.
2. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் தட்டி வைத்திருக்கும் தட்டைகளைப் போட்டுப் பொரித்து எடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.