சாத பக்கோடா
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. சாதம் - 1 கப்
2. வெங்காயம் - 1 எண்ணம்
3. இஞ்சி - 1 துண்டு
4. பச்சை மிளகாய் - 1 எண்ணம்
5. மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி
6. கடலை மாவு - 2 தேக்கரண்டி
7. பஜ்ஜி மாவு- 2 தேக்கரண்டி
8. கலர் பவுடர் - சிறிது
9. உப்பு - தேவையான அளவு
10. எண்ணெய் - தேவையான அளவு
11. கறிவேப்பிலை - சிறிது
12. மல்லித்தழை - சிறிது
செய்முறை:
1. சாதத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு மசித்துக் கொள்ளவும்.
2. அதனுடன், வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கடலை மாவு, பஜ்ஜி மாவு, கலர் பவுடர், மிளகாய்த்தூள், உப்பு, கறிவேப்பிலை, மல்லித்தழை என்று அனைத்தையும் சேர்த்துச் சிறிது தண்ணீர் விட்டுப் பிசையவும்.
3. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் பிசைந்த மாவை பக்கோடா போல் உதிர்த்துப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.