அவல், பொரி உருண்டை
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. அவல் - 1 கப்
2. பொரி - 2 கப்
3. வெல்லத்தூள் - 1 கப்
4. முந்திரி - 1 மேசைக்கரண்டி
5. நெய் - 4 தேக்கரண்டி
6. ஏலக்காய்த்தூள் - 1 தேக்கரண்டி
7. சுக்குத்தூள் - 1 தேக்கரண்டி
8. வேர்க்கடலை - 25 கிராம்
9. பொட்டுக்கடலை - 25 கிராம்
செய்முறை:
1. ஒரு வாணலியில் நெய் விட்டுக் காய்ந்ததும் அதில் முந்திரி, அவல், பொரியைப் போட்டுப் பொன்னிறமாக வறுக்கவும்.
2. வெல்லத்தூளுடன் ஏலக்காய்த்தூள், சுக்குத்தூள் சேர்த்துச் சிறிது தண்ணீர் விட்டுப் பாகு பதத்தில் காய்ச்சவும்.
3. வேர்க்கடலையை வறுத்துத் தோல் நீக்கி, அதனுடன் பொட்டுக் கடலை, வறுத்த முந்திரி, அவல், பொரியைக் கலக்கவும்.
4. அவல், பொரிக் கலவையை சர்க்கரைப் பாகில் கொட்டிக் கிளறி, உருண்டையாகப் பிடிக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.