ஸ்வீட் சமோசா
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. மைதா மாவு -1 கப்
2. ரவை -1/2 கப்
3. வெண்ணெய்/ நெய் - 1 மேசைக்கரண்டி
4. உப்பு - தேவையான அளவு
பூரணம் செய்திட:
5. தேங்காய் துருவல் - 4 தேக்கரண்டி
6. பொட்டுக்கடலை - 4 தேக்கரண்டி
7. சீனி - 4 தேக்கரண்டி
8. ஏலக்காய் - 4 எண்ணம்
9. சுக்கு -சிறிது
10. எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
1. தேங்காய்த் துருவலை வாணலியில் சிறிது நெய் ஊற்றி வறுக்கவும், பொட்டுக்கடலை, சீனி, ஏலக்காய், சுக்கு, சீனி சேர்த்துப் பொடிக்கவும்,
2. பின்னர் வறுத்த தேங்காய் துருவலைச் சேர்த்துப் பூரணம் தயார் செய்து தனியாக வைக்கவும்.
3. மைதா மாவு, ரவை, வெண்ணெய்/நெய், உப்பு சேர்த்துச் சிறிது சிறிதாகத் தண்ணீர் விட்டு பூரி பதத்திற்க்கு ஏற்றதாகப் பிசையவும்.
4. பிசைந்த மாவைச் சிறு, சிறு பூரிகளாக தேய்க்கவும்.
5. பூரியினை இரண்டாகப் பகிர்ந்து அதனுள் பூரணத்தை வைத்து, ஓரங்களில் சிறிது தண்ணீர் வைத்து ஒட்டவும்.
6. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் பூரணம் மடித்த பூரியினை மிதமான நெருப்பில் பொறித்து எடுக்கவும்.
குறிப்பு: நன்றாக ஆறியபின், காற்று புகாத பாத்திரத்தில் மூடி வைத்தால், ஒரு மாதம் வரை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.