ஜாங்கிரி
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. உளுந்து -- 1 கப்
2. சர்க்கரை -- 1 கப்
3. சிவப்பு கலர் பொடி -- 2 சிட்டிகை
4. உப்பு -- தேவையான அளவு.
செய்முறை:
1. உளுந்தைத் தண்ணீரில் நன்றாக ஊற வைத்து உப்பு சேர்த்து ஆட்டிக்கொள்ளவும்.
2. சர்க்கரையைப் பாகு காய்ச்சி கலர் பொடி சேர்த்து வைக்கவும்.
3. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய வைக்கவும்.
4. மெலிதான துணியில் ஓட்டை போட்டு அதை சுற்றிலும் தைத்து அதில் மாவைப் போட்டு, காய்ந்து கொண்டிருக்கும் எண்ணையில் வட்டமாகப் பிழிந்து விடவும்.
5. பிழிந்த மாவு வெந்ததும் கரண்டி கொண்டு எடுக்கவும்.
6. சிறிது நேரம் அதை ஆற வைத்து, அதைத் தயாரித்து வைத்திருக்கும் சர்க்கரைப் பாகில் ஊற வைக்கவும்.
7. நன்கு ஊறிய ஜாங்கிரியைப் பரிமாறலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.