முந்திரி முறுக்கு
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. பச்சை அரிசிமாவு - 1/2 கிலோ
2. முந்திரிப் பருப்பு - 100 கிராம்
3. நெய் - 3 தேக்கரண்டி
4. உப்பு - தேவையான அளவு
5. எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
1. முந்திரிப் பருப்பைப் பத்து நிமிடம் ஊற வைத்து விழுதாக அரைத்து கொள்ளவும்.
2. பச்சரிசி மாவு, உருக்கிய நெய், உப்பு, முந்திரி விழுது ஆகியவற்றுடன் சிறிது தண்ணீர் சேர்த்து முருக்கு மாவு பதத்திற்கு கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.
3. முருக்கு அச்சில் மாவைப் போட்டு வாழை இலைத் துண்டில் முறுக்காகப் பிழிந்து கொள்ளவும்.
4. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் பிழிந்த முறுக்கு மாவைப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.