கோதுமை அல்வா
சசிகலா தனசேகரன்
தேவையான பொருட்கள்:
1. கோதுமை மாவு - 2 கப்
2. சர்க்கரை - 2 கப்
3. ஏலக்காய் பொடி - 1 தேக்கரண்டி
4. முந்திரிப் பருப்பு - 5 எண்ணம்
5. பாதாம் பருப்பு - 7 எண்ணம்
6. உலர் திராட்சை - 5 எண்ணம்
7. நெய் - 1 கப்.
செய்முறை:
1. ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய்யை ஊற்றிக் காய்ந்ததும், அத்துடன் கோதுமை மாவைப் போட்டு நன்கு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
2. அதில் மெதுவாக தண்ணீரை விட்டு, மாவு கெட்டி கெட்டியாகச் சேராதவாறு கிளற வேண்டும்.
3. மாவைக் கிளறும் போது, தண்ணீரை மாவு உறிஞ்சும் வரை, தொடர்ந்து 3 நிமிடம் வரைக் கிளற வேண்டும்.
4. தண்ணீர் ஓரளவு வற்றியதும், அதில் சர்க்கரையைப் போட்டுச் சர்க்கரை உருகும் வரை தொடர்ந்து கிளற வேண்டும்.
5. மாவானது அல்வா பதத்திற்கு வரும் போது, அடுப்பை அனைத்துவிட வேண்டும்.
6. பின் அதன் மேல் ஏலக்காய் பொடி, முந்திரி, பாதாம், உலர் திராட்சை போன்றவற்றை போட்டு அலங்கரிக்கவும்.
குறிப்பு:
1. பால் வாசனை விரும்புபவர்கள் தண்ணீருக்குப் பதிலாகப் பாலைச் சேர்த்துக் கொள்ளலாம்.
2. நன்கு காய்ச்சிய பாலை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.