ரவா கேசரி
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. ரவை -1 கப்
2. சீனி - 2 கப்
3. நெய் -3 கப்
4. தேங்காய் எண்ணெய் -1 மேசைக்கரண்டி
5. ஏலக்காய்- 4 எண்ணம்
6. முந்திரிப்பருப்பு - 10 எண்ணம்
7. பாதாம் பருப்பு - 5 எண்ணம்
8. கிஸ்மிஸ் - 10 எண்ணம்
9. கேசரிப்பொடி -1 சிட்டிகை
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் ரவையை சிறிது நெய் ஊற்றி பச்சை வாசம் போகும் வரை நிறம் மாறமல் வறுத்து ஆற வைக்கவும்.
2. அடி கனமான பாத்திரத்தில் சிறிது நெய் ஊற்றி மூன்று கப் தண்ணீர் ஊற்றி, சீனி, கேசரிப்பொடி சேர்த்துக் கொதிக்க விடவும்.
3. கொதி வந்ததும், ஒரு பக்கமாக வறுத்து ஆறிய ரவையைக் கொஞ்சம், கொஞ்சமாகக் கட்டி விடாமல் கிளறி மிதமான நெருப்பில் ரவையை வேகவிடவும்.
4. வேகும்போது சிறிது நெய், தேங்காய் எண்ணைய்யை ஊற்றிக் கிளறி விடவும்.
5. கேசரி இளக்கமாக வரும் போது, மீதமிருக்கும் நெய்யைச் சேர்க்கவும்,
6. ஒரு வாணலியில் சிறிது நெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் ஏலக்காய், முந்திரி, பாதாம் பருப்புகள், கிஸ்மிஸ் பழம் போட்டு வதக்கிக் கிளறீ இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.