போளி
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. மைதா -1 கப்
2. கோதுமைமாவு-1/4 கப்
3. மஞ்சள்தூள்-1/4 தேக்கரண்டி
4. நெய் - 6 தேக்கரண்டி
5. உப்பு - தேவையான அளவு
பூரணம் செய்ய
6. கடலைப் பருப்பு - 1கப்
7. வெல்லம் -1/2 கப்
8. ஏலக்காய் - 2 எண்ணம்
செய்முறை:
1. மைதா, கோதுமைமாவு, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்கு பிசையவும். பின் அதை 30 நிமிடம் ஊறவிடவும்.
2. ஒரு பாத்திரத்தில் கடலைபருப்புடன் 2 கப் தண்ணீர் சேர்த்து வேக விடவும்.
3. வேக வைத்த கடலைப்பருப்பைத் தண்ணீர் வடித்து, வெல்லம், ஏலக்காய் சேர்த்துக் கொரகொரப்பாக அரைக்கவும்.
4. ஒரு நெகிழித்தாளில் அல்லது வாழையிலையில் நெய் தடவி பிசைந்து வைத்து உள்ள மாவில் ஒரு உருண்டை எடுத்து சிறியதாக தட்டி கொள்ளவும்.
5. தட்டிய மாவின் நடுவில் பூரணத்தை வைத்து நன்கு மூடி உருண்டையாகச் செய்து கொள்ளவும்.
6. பின் கையில் நெய் தடவி நன்கு மெலிதாக வரும் வரை தட்டிக் கொள்ளவும்.
7. பின்னர் தோசைக்கல்லில் தட்டிவைத்த போளியைப் போட்டுச் சிறிது நெய் ஊற்றி ரெண்டு பக்கமும் வேகவிட்டு எடுக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.