தட்டல்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. புழுங்கல் அரிசி - 1 கிலோ
2. வறுத்துத் திரித்த உளுந்த மாவு - 150 கிராம்
3. கடலைப் பருப்பு - 3 மேஜைக் கரண்டி
4. தேங்காய் - பாதி
5. மிளகாய் வற்றல் - 50 கிராம்
6. பெருங்காயம் - தேவையான அளவு
7. உப்பு - தேவையான அளவு
8. எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
1.கடலைப் பருப்பைத் தனியாக நனைய வைக்கவும்.
2. அரிசியை ஒரு மணி நேரம் தண்ணீரில் நனைய வைத்து சுத்தம் செய்து வற்றல் காயம், உப்பு, கருவேப்பிலை சேர்த்து கட்டியாக அரைக்கவும்.
3. இத்துடன் உளுந்த மாவு, நனைய வைத்த கடலைப் பருப்பு, தேங்காய்ப் பூ, சேர்த்து பிசைந்து வைக்கவும்.
4. பிசைந்த மாவை நெல்லிக்காய் அளவில் உருட்டி மெல்லிய துணியில் கையில் வைத்துத் தட்டவும்.
5. வாணலியில் எண்ணெய்யைக் காய வைத்து தட்டிய தட்டல்களைப் போட்டுப் பொன்னிறமாக வேக வைத்து எடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.