இனிப்பு சோமாஸ்
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. மைதா – 2 கப்
2. நெய் – 2 டீஸ்பூன்
3. உப்பு – ஒரு சிட்டிகை
பூரணத்துக்கு
1. பொட்டுக்கடலை – 1 கப்
2. தேங்காய்த் துருவல் – 1/4 கப்
3. சர்க்கரை - 1 கப்
4. ஏலக்காய்த்தூள் – 1 தேக்கரண்டி
5. கசகசா – 2 தேக்கரண்டி
6. முந்திரிப் பருப்பு – 2 தேக்கரண்டி
7. எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை:
1. மைதா, நெய், உப்பு ஆகியவற்றுடன் தண்ணீர் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்.
2. பொட்டுக் கடலை, கசகசா இரண்டையும் தனித்தனியாக வறுத்து, தேங்காய்த் துருவலுடன் சேர்த்துப் பொடியாக அரைக்கவும்.
3. அரைத்ததுடன் சர்க்கரை, முந்திரிப்பருப்பு, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து பூரணம் தயார் செய்து கொள்ளவும்.
4. பிசைந்து வைத்துள்ள மாவிலிருந்து சிறிது எடுத்து வாழை இலையில் மெல்லியதாக தட்டி, அதில் சிறிதளவு பூரணத்தை ஒரு பாதியில் வைத்து மறுபாதியால் மூடவும்.
5. இரண்டு ஓரங்களையும் தண்ணீர் தொட்டு ஒட்டவும்.
6. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் ஒட்டி வைத்த சோமாஸ் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.