முந்திரிப் பருப்பு பகோடா
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. கடலை மாவு – 1 கிலோ
2. அரிசி மாவு – 150 கிராம்
3. முந்திரிப்பருப்பு – 200 கிராம்
4. டால்டா – 200 கிராம்
5. பெரிய வெங்காயம் – 200 கிராம்
6. பச்சை மிளகாய் – 5 எண்ணம்
7. கறிவேப்பிலை – சிறிது
8. இஞ்சி – சிறிய துண்டு
9. எண்ணெய் – தேவையான அளவு
10. உப்பு – தேவையான அளவு
செய்முறை:
1. டால்டாவில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலக்கிக் கொள்ளவும்.
2. அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு, முந்திரி பருப்பு, கடலைமாவு, அரிசி மாவு ஆகியவற்றைப் போட்டு பிசறிக் கொள்ளவும்.
3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் பிசறிய மாவைச் சிறிய உருண்டைகளாகப் போட்டுப் பொரித்து எடுக்கவும்.
4. கடைசியாகப் பகோடா மீது கறிவேப்பிலையை வறுத்து போட்டு சூடாகப் பரிமாறலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.