கோதுமை அல்வா
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. சம்பா கோதுமை - 1 கப்
2. சர்க்கரை - 3 கப்
3. நெய் - 1 கப்
4. கேசரி பவுடர் - தேவையான அளவு
5. ஏலக்காய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
6. முந்திரித் துண்டுகள் - சிறிது
செய்முறை:
1. கோதுமையை முதல் நாள் இரவே ஊற வைக்கவும்.
2. மறுநாள் ஊற வைத்த தண்ணீரை சேர்த்துக் கோதுமையை விழுதாக அரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
3. இதை அப்படியே தனியாக அரை மணி நேரம் வைக்கவும். மேலே தண்ணீர் தெளிந்து இருக்கும். கீழே குழம்பாக பால் போன்று இருக்கும்.
4. மேலே தெளிந்த நீரை எடுத்துத் தனியே வைக்கவும்.
5. இந்த நீரில் தேவையான சர்க்கரையை சேர்த்துத் தேவைப்பட்டால் தண்ணீர் சிறிது விட்டு (சர்க்கரை மூழ்கும் வரை) அடுப்பில் வைத்து, இரட்டை கம்பி பதத்துக்கு வந்தவுடன் கோதுமைப் பாலைச் சிறிது சிறிதாக ஊற்றி நன்றாகக் கிளறவும்.
6. உருக்கிய நெய்யையும் சிறிது சிறிதாக ஊற்றிக் கிளறிக் கொண்டே இருக்கவும்.
7. அதில் முந்திரித் துண்டுகள், ஏலக்காய்த்தூள், கேசரி பவுடர் சேர்க்கவும்.
8. நன்றாகத் திரண்டு கெட்டியாகப் பாத்திரத்தில் ஒட்டாமல் வந்தவுடன், நெய் தடவிய தாம்பாளத்தில் ஊற்றிச் சமப்படுத்தி, ஆறியவுடன் துண்டுகளாக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.