எள்ளு உருண்டை
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. வெள்ளை எள் – 4 கப்
2. சர்க்கரை – 3 கப்
3. ஏலக்காய் – 6 எண்ணம்
4. நெய் – தேவையான அளவு
செய்முறை:
1. வாணலியை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி அதில் எள்ளைப் போட்டு வாசனை வரும் வரை வறுக்கவும்.
2. வறுத்த எள்ளுவில் சிறிதை எடுத்துத் தனியாக வைக்கவும்.
3. மீதமுள்ள வறுத்த எள்ளு, சர்க்கரை, ஏலக்காய் சேர்த்து மொற மொறப்பாக மாவு போல் அரைக்கவும்.
4. அரைத்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
5. உருண்டைகளை ஏற்கனவே எடுத்து வைத்திருக்கும் முழு எள்ளிள் இலேசாக ஒரு பிரட்டு பிரட்டி எடுத்துக் கொள்ளவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.