கருப்பட்டி மிட்டாய்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. இட்லி அரிசி – 1 கப்
2. உளுத்தம் பருப்பு – 1/4 கப்
3. கருப்பட்டித் தூள் – 2 கப்
4. ஏலக்காய் பொடி – 1 தேக்கரண்டி
5. சுக்குப் பொடி – 1 தேக்கரண்டி
6. எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை:
1. அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை நன்கு கழுவிப், பின் நீரில் மூன்று மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
2. நீரை வடித்து, மிக்ஸியில் போட்டுச் சிறிது தண்ணீர் ஊற்றி மென்மையாக அரைக்கவும்.
3. ஒரு வாணலியில் கருப்பட்டித் தூளில் தண்ணீர் ஊற்றிக் கரைத்துக் கொதிக்க வைக்க வேண்டும்.
4. அதனை இறக்கி ஓரளவு குளிர்ந்ததும், வடிகட்டி மீண்டும் வாணலியில் ஊற்றிப் பத்து நிமிடம் அல்லது சிறிது கெட்டியாகும் வரை கொதிக்க விட வேண்டும்.
5. பிறகு அதில் ஏலக்காய் பொடி, சுக்குப்பொடி சேர்த்துக் கிளறி இறக்கி விட வேண்டும்.
6. மற்றொரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய வைக்கவும்.
7. பின்பு தனியாக வைத்துள்ள மாவை ஒரு கெட்டியான பாலிதீன் பையில் சிறிது வைத்து, அந்தப் பையில் முறுக்கு போன்று வரும் அளவில் ஓட்டை போட்டுக் கொள்ளவும்.
8. எண்ணெய் காய்ந்ததும், அதில் வட்ட வட்டமாக மாவைப் பிழிந்து விட்டு, பொன்னிறமாக வேகவைத்து எடுக்கவும்.
9. வேகவைத்து எடுத்ததைக் கருப்பட்டிப் பாகுவில் போட்டு, முன்னும் பின்னுமாக ஊற வைத்து எடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.