சுரைக்காய் அல்வா
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. சுரைக்காய் (தோல் நீக்கி துருவியது) – 1 கப்
2. சர்க்கரை – 150 கிராம்
3. நெய் – 4 தேக்கரண்டி
4. ஏலக்காய் – 1/4 தேக்கரண்டி
5. முந்திரிப்பருப்பு – 12 எண்ணம்
6. சிகப்பு நிறப் பவுடர் (உணவில் சேர்க்கக் கூடியது) – 1 சிட்டிகை
செய்முறை:
1. ஒரு கடாயில் நெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் முந்திரிப் பருப்பு போட்டுப் பொன்னிறமாக வறுத்து எடுத்து வைக்கவும்.
2. ஒரு கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும், துருவிய சுரைக்காய் போட்டு நன்றாக வதக்கிச் சர்க்கரை, சிகப்பு நிறப் பவுடர் சேர்த்து நன்றாகக் கிளறவும்.
3. பிறகு, நெய் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்துக் கிளறி ஏலக்காய்த்தூள், நெய்யில் வறுத்த முந்திரிப் பருப்பு சேர்த்து நன்றாகக் கிளறி அல்வா பதம் வந்தவுடன் இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.