ஓமப்பொடி
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. கடலை மாவு - 2 கப்
2. அரிசி மாவு - 2 கப்
3. வெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
4. ஓமம் (பொடி செய்தது) - 1 தேக்கரண்டி
5. லெமன் கலர் - 3/4 தேக்கரண்டி
6. உப்பு - தேவையான அளவு
7. எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
1. கடலை மாவு, அரிசி மாவு, வெண்ணெய், ஓமம் தூள், உப்பு அனைத்தையும் சேர்த்து ஒன்றாகப் பிசைந்து, சிறிது சிறிதாகத் தண்ணீர் சேர்த்துக் கலக்கவும்.
2. இந்தக் கலவைவில் லெமன் கலரையும் சேர்த்து மிருதுவாக வரும்வரை பிசைந்து வைக்கவும்.
3. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய வைக்கவும்.
4. அச்சுக்குழலில் இலேசாக எண்ணெய் தடவி, ஓமப்பொடிக்கு ஏற்ற அச்சை உள்ளே போட்டு, பிசைந்த மாவைப் போட்டுக் காய்ந்த எண்ணெய்யில் மிதமான நெருப்பில் பொறித்தெடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.