சாமை முள்ளு முறுக்கு
சசிகலா தனசேகரன்
தேவையான பொருட்கள்:
1. சாமை மாவு – 100 கிராம்
2. அரிசி மாவு – 50 கிராம்
3. சிறுபருப்பு – 50 கிராம்
4. பொட்டுக்கடலை மாவு – 1 மேசைக்கரண்டி
5. வெண்ணெய் – 1 மேசைக்கரண்டி
6. பெருங்காயத்தூள் – சிறிது
மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
8. சீரகம் - 2 தேக்கரண்டி
9. எண்ணெய் (காய்ந்தது) – 2 தேக்கரண்டி
10. எண்ணெய் – தேவையான அளவு
11. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. ஒரு அடுப்பில் கடாயை வைத்துச் சிறுபருப்பை இலேசாக வறுத்து ஆறவிடவும்.
2. அதை மிக்ஸியில் நைஸாகப் பொடித்து சலிக்கவும். அதேபோல் பொட்டுக் கடலையையும் பொடித்து சலிக்கவும்.
3. சாமை மாவையும் அரிசி மாவையும் லேசாக வறுத்துச் சலித்து அனைத்தையும் கலந்து உப்பு, பெருங்காயத்தூள், சீரகம், மிளகாய்த்தூள், சூடான எண்ணெய், வெண்ணெய் சேர்த்து தேவையான நீர் விட்டு பிசைந்து 5 நிமிடம் மூடி வைக்கவும்.
4. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் முறுக்குப் பிழியும் உழக்கில் மாவை வைத்து, பெரிய பெரிய முறுக்காக ஒவ்வொன்றாக பிழிந்து இருபுறமும் வேகவைத்து எடுக்கவும்.
5. ஆறிய பின்பு உடைத்துப் பரிமாறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.