வெந்தயம் இஞ்சி டீ
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. வெந்தயம் - 1 மேசைக்கரண்டி
2. இஞ்சி - சிறிய துண்டு
3. பட்டை - சிறிய துண்டு
4. ஜாதிக்காய் - சிறிது
5. எலுமிச்சைச் சாறு - 1/2 தேக்கரண்டி
6. நாட்டுச் சர்க்கரை - தேவையான அளவு
செய்முறை:
1. வெந்தயம், இஞ்சியுடன் தண்ணீர் சேர்த்து இரவு முழுவதும் ஊற வைக்கவும்.
2. காலையில் அதனுடன் பட்டைத்தூள், ஜாதிக்காய்த் தூள் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
3. நன்றாகக் கொதித்து, அதாவது, இரண்டு டம்ளர் ஒரு டம்ளர் ஆக வரும் பொழுது, அதில் எலுமிச்சைச் சாறு, நாட்டுச் சர்க்கரை சேர்த்து நன்றாகக் கலந்துவிட்டு அடுப்பை அணைக்கவும்.
4. அதன் பிறகு, டம்ளரில் ஊற்றி அருந்தலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.