செம்பருத்தி டீ
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. செம்பருத்தி பூ - 5 இதழ்கள்
2. நாட்டுச் சர்க்கரை - 1 தேக்கரண்டி
3. பட்டை - 1 துண்டு
4. எலுமிச்சை சாறு - 1/2 தேக்கரண்டி
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் ஒன்றரை கோப்பை தண்ணீர் ஊற்றி, அதில் பட்டை. நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் கொதிக்கவிடவும்.
2. இரண்டும் கொதித்து வரும் போது செம்பருத்திப் பூவிதழ்களைச் சேர்த்து அடுப்பை அணைத்து இறக்கி வைக்கவும்.
3. இறக்கி வைத்ததில் எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கி, ஏற்ற சூட்டில் அல்லது குளிர்ச்சியாகவோ அருந்தலாம்.
குறிப்பு:
தேயிலைத் தூள் சேர்க்காத இந்தச் செம்பருத்திச் சாற்றை, செம்பருத்தி டீ என்றே சொல்கின்றனர்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.