மசாலா பால்
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. பால் – 3 கப்
2. பாதாம்பருப்பு – 10 எண்ணம்
3. பட்டை – 1 துண்டு
4. கிராம்பு – 3 எண்ணம்
5. ஏலக்காய்த்தூள் – 1/2 தேக்கரண்டி
6. சர்க்கரை – 3 தேக்கரண்டி
7. குங்குமப்பூ – சிறிது
8. சாரைப்பருப்பு - சிறிது
9. பிஸ்தாபருப்பு – சிறிது
செய்முறை:
1. பாதாம்பருப்பை ஊறவைத்துத் தோல்நீக்கி விழுது போல் அரைத்து வைக்கவும்.
2. பாலில் பட்டை, கிராம்பு சேர்த்து நன்கு கொதிக்க வைத்து வடிகட்டவும்.
3. வெதுவெதுப்பான பாலில் குங்குமப்பூவைச் சேர்த்துக் கரைய விடவும்.
4. வடிகட்டிய பாலில் அரைத்த பாதாம் விழுதைச் சேர்த்து மீண்டும் கொதிக்க விடவும்.
5. பின் சர்க்கரை, ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ சேர்த்து சர்க்கரை கரைந்ததும் இறக்கவும்.
6. பரிமாறும் போது பிஸ்தாபருப்பு, சாரைப்பருப்பு சேர்த்துக் கொள்ளவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.