மசாலா காபி
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. பால் - 3 கப்
2. காபி பொடி - 2 மேசைக்கரண்டி
3. சர்க்கரை - தேவையான அளவு
அரைக்க
4. கிராம்பு - 4 எண்ணம்
5. ஏலக்காய் - 2 எண்ணம்
6. பட்டை - 1 துண்டு
7. மிளகு - 4 எண்ணம்
செய்முறை:
1. அரைக்க வேண்டிய பொருட்களை நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
2. பால், தண்ணீர், அரைத்த பொடி மூன்றையும் சேர்த்து மிதமான சூட்டில் கொதிக்க வைக்கவும்.
3. அடிப்பிடித்து விடாமல் அவ்வப்போது கலக்கவும்.
4. காபி கலக்கும் கப்பில் ஒரு தேக்கரண்டி சர்க்கரை, தேவையான அளவு காபி பொடி சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
5. அதனுடன் கொதிக்க வைத்த மசாலாப் பாலையும் சேர்த்துக் கலக்கிப் பரிமாறவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.