இஞ்சிக் காபி
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. இஞ்சி - 2 துண்டு
2. காப்பித்தூள் - 1 தேக்கரண்டி
3. சர்க்கரை - தேவையான அளவு
செய்முறை:
1. இஞ்சியைக் கழுவி, சிறு உரலில் இடித்து வைக்கவும்.
2. ஒரு பாத்திரத்தில் 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி இடித்த இஞ்சியைச் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
3. கொதிக்க ஆரம்பித்ததும், அதில் சர்க்கரை, காப்பித்தூள் சேர்த்து இரண்டு நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
4. காபியிலிருக்கும் இஞ்சியை வடிகட்டிக் குடிக்கலாம். (இஞ்சி சேர்த்துக் கொள்ள விரும்புபவர்கள் அப்படியே சாப்பிடலாம்)
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.