குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினர்களின் எண்ணமும் "எங்கள் குடும்பம் அமைதியான ஒற்றுமை மிக்கது என்று அனைவரும் உணர்ந்திருந்தாலே ஒரு பெரிய மகிழ்ச்சி. நாங்கள் எல்லோரும் என்றும் பிரியாமல் இணைந்து வாழ்வோம்"- என்று உறுதி கொள்ள வேண்டும் இதனை எப்படி உருவாக்குவது?
1. குடும்பத்தில் ஒரு வேளையாவது, அனைத்து உறுப்பினர்களும் சேர்ந்து உணவு உண்ண வேண்டும்.
2. குடும்பத்துடன் வாரம் ஒரு முறையாவது வெளியில் சென்று வர வேண்டும்.
3. விடுமுறைகளில் வெளியூர் பயணம் சென்று குடும்பத்துடன் தங்கி மனம் விட்டுப்பேசி மகிழ்ந்து சிரித்துக் கொண்டாடி வர வேண்டும்.
4. ஒவ்வொரு நாளும் குடும்பத்துடன் எல்லோரும் சிறிது நேரமாவது இணைந்திருத்தல் வேண்டும்.
5. ஒருவர் வெற்றியை எல்லோரும் கொண்டாட வேண்டும். வாழ்த்துக்களைப் பரிமாற வேண்டும்.
6. நிறைய புகைப்படங்கள் எடுத்து ஆல்பம் தயாரிக்க வேண்டும்.
7. ஒருவருக்கு சங்கடமோ, தோல்வியோ வந்தால் அனுதாபத்துடன் தனித்தனியாகச் சென்று பேசி ஆதரவு கொடுக்க வேண்டும். பேசச்சொல்லி, மன உணர்வுகளைக் கேட்டு அவர்கள் சுமையை இறக்கி வைக்கத் துணை புரிய வேண்டும்.
8. விழா நேரங்களில் எங்கிருந்தாலும் வந்து கூடிக் கொண்டாட வேண்டும்.
9. மனதளவில் குடும்ப உறுப்பினர் ஒவ்வொருவரையும் நினைத்துத் தினமும் வாழ்த்த வேண்டும்.
10. உறவில் 'தான்' என்ற எண்ணம் வேண்டாம். போலிக் கௌரவம், மானம், ரோசம் குடும்பத்தில் வேண்டாம்.
11. எவர் என்னைத் திட்டினாலும், கோபித்தாலும், என்னை அவமதித்தாலும், எனக்கு உதவி செய்ய மறுத்தாலும், நான் அன்பு செய்வேன். உங்கள் மேல் நான் கொண்டுள்ள அன்பே பேரானந்தம் என்று கூற வேண்டும்.
12. தினசரி ஐந்து நிமிடமாவது அனைவரும் இணைந்து மன அமைதிக்கான தியானம் செய்ய வேண்டும்.