1. எலுமிச்சம் பழச்சாறு அருந்த மலச்சிக்கல் நீங்கும். அதிகதாகம், நாவறட்சி போன்றவை நீங்கும்.
2. எலுமிச்சை சாற்றினைச் சுடுநீரில் கலந்து குடிக்க அஜீரணம், வயிற்றுப் பொருமல், உணவு உண்ட பின் ஏற்படும் வயிறு ஊதல் அகலும்.
3. ஒரு கரண்டி எலுமிச்சம் பழச் சாற்றுடன் சம அளவு வெங்காய்ச் சாறு கலந்து குடித்து வந்தால் வயிற்றுப் போக்கு நீங்கும்.
4. எலுமிச்சம் பழச் சாற்றில் உப்பு சேர்த்துச் சாப்பிட உடம் வெம்மை தீரும். வாந்தி நிற்கும்.
5. எலுமிச்சைச் சாற்றை மூக்கில் தேய்த்து உறிஞ்ச மூக்கிலிருந்து இரத்தம் வடிதல் நிற்கும்.
6. படிகாரத்தைப் பொடியாக்கி எலுமிச்சைச் சாற்றில் கலந்து பல் துலக்கினால் பல்லிலுள்ள பழுப்புக் கறைகள் நீங்கும்.
7. எலுமிச்சம் பழத் தோலை அரைத்து நெற்றியில் பற்றுப் போட தலைவலி நீங்கும். தலை குளிர்ச்சிய்டையும்.
8. எலுமிச்சைச் சாற்றுடன் நுங்கு நீர் கலந்து உடலில் பூசினால் கோடைக்கால வெப்பத் தோல் நோய்கள், அரிப்புகள் மாறும்.
9. மாமரப்பிசின், எலுமிச்சைச் சாறு கலந்து பித்த வெடிப்பில் பூச வெடிப்பு மறையும்.
10. எலுமிச்சைச் சாறு கலந்த நீரால் வாய் கொப்பளிக்க வாய் துர்நாற்றம் போகும்.
11. எலுமிச்சைச் சாதம் வயிற்றுக் கடுப்பை நீக்கும்.
12. எலுமிச்சைச் சாறுடன் இஞ்சிச் சாறு கலந்து சாப்பிட பித்தம், அஜீரணம் அகலும்.
13. எலுமிச்சைச் சாற்றுடன் தேன் கலந்து சாப்பிட உடல் பலம் ஏற்படும். கண் பார்வை சரியாகும்.
14. எலுமிச்சைச் சாற்றுடன் தேன் கலந்து முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவினால் முகச்சுருக்கங்கள் மாறும்.
15. இஞ்சியைத் துண்டுகளாக்கி எலுமிச்சைச் சாற்றில் ஊறவைத்துப் பின் உலர வைத்துச் சாப்பிட்டால் வாய்க்கசப்பு இருக்காது.
16. எலுமிச்சை தோல்களை உலர வைத்துப் பொடியாக்கி, உப்பு கலந்து நல்லெண்ணெய்யில் குழைத்துப் பல் துலக்கினால் பல் பளபளப்பாகும்.
17. எலுமிச்சைத் தோல்களைக் கொண்டு முழங்கை, முழங்கால்களில் தேய்க்க சொரசொரப்பு நீங்கி மென்மையாகும்.
18. தேயிலை வடிசாற்றில், எலுமிச்சைச் சாறு கலந்து தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் தலைமுடி கருமையாக வளரும்.
19. ஒரு டம்ளர் எலுமிச்சைச் சாற்றில் ஒரு கரண்டி நல்லெண்ணெய் சேர்த்துக் குடிக்க நீர்க்கடுப்பு எரிச்சல் தீரும்.
20. தேநீரில் எலுமிச்சைச் சாறு கலந்து குடிக்கத் தலைவலி நீங்கும்.
21. இளநீரில் எலுமிச்சைச் சாறு கலந்து குடிக்க வயிற்று வலி போகும்.
22. சளி பிடித்துள்ள நேரத்தில் வெந்நீரில் எலுமிச்சைச் சாறு சேர்த்துக் குடித்தால் சளி குறையும்.
23. தேங்காய் எண்ணெய்யுடன் சிறிது எலுமிச்சைச் சாறு கலந்து தலையில் தேய்த்துக் குளித்தால் பொடுகு நீங்கும்.
24. மோரில் எலுமிச்சைச் சாற்றைக் கலந்து குடித்து வந்தால் இரத்த அழுத்தம் குறையும்.
25. எலுமிச்சைச் சாற்றுடன் சிறிதளவு பூண்டுச் சாறு கலந்து தேய்த்து வந்தால் தேமல், படை போன்றவை மறையும்.