சித்த மருத்துவக் குறிப்புகள்
இயற்கையான சில சித்த மருத்துவக் குறிப்புகள் சில...
1. கண்கள் ஒளி பெற சூரிய உதயத்திற்கு முன்பாக எழுந்து கொள்ள வேண்டும்.
2. கண்பார்வை தெளிவடைய இரவில் படுக்கையில் கண்களைச் சுற்றி வந்தால் கண் நரம்புகள் பலம் பெறும்.
3. காது வலி தீர வெற்றிலைச் சாறு அல்லது எருக்கன் கொட்டைச் சாறு இரு துளி காதில் விட வேண்டும்.
4. தூக்கம் வர சீரகம் பொடி செய்து வாழைப்பழத்துடன் உண்ண வேண்டும்.
5. மனத்தூய்மை பெறவும், நற்குணம் பெறவும் தினம் காலை பத்மாசனம் செய்ய வேண்டும்.
6. கண் குளிர்ச்சியாகவும் மூளை பலம் பெறவும் வெண்டைக்காய் சாப்பிடவேண்டும்.
7. உடல் பலம் பெற தக்காளிப் பழம் சாப்பிட வேண்டும்.
8. குடலில் உள்ள கல், முடி போன்ற நஞ்சுகள் வெளியேற வாழைத்தண்டு பொறியல் உண்ண வேண்டும்.
9. ஞாபகசக்தி பெருகவும் உடல் எடை குறையவும் தினம் காலை வெந்நீரில் தேன் கலந்து வெறும் வயிற்றில் அருந்தவும்.
10. நரம்புத் தளர்ச்சி குணமாக நெய்யில் வெள்ளை வெங்காயத்தை வதக்கிச் சாப்பிடவும். பீட்ரூட் கிழங்கும் சாப்பிடலாம்.
11. நரம்புகள் பலப்பட கொத்தமல்லிக் கீரை வாரம் இரு முறை உண்ண வேண்டும்.
12. முகம் பளபளக்க எழுமிச்சைச் சாறு பிழிந்து ஆவியை முகத்தில் மூன்று நாட்கள் பிடிக்க வேண்டும்.
13. முகம் அழகு பெற துளசி இலையைக் கசக்கி முகத்தில் தேய்த்துக் காயவிட்டுப் பின்னர் குளிக்க வேண்டும்.
14. முடி அடர்த்தியாகக் கருப்பாக வளர கருவேப்பிலையை அரைத்துத் தேங்காய் எண்ணையில் காய்ச்சி தலையில் தேய்த்து வரலாம் அல்லது கீழாநெல்லி வேரைச் சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கித் தேங்காய் எண்ணையில் காய்ச்சித் தலையில் தேய்க்கவும்.
15. முடி உதிர்வது நிற்க வேப்பிலை ஒரு கைப்பிடி நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து அந்த நீரால் தலைக்குக் குளிக்க வேண்டும் அல்லது வெந்தயம் அரைத்துத் தலையில் தேய்த்துக் குளிக்கவும்.
16. வழுக்கை மறைய வெங்காயம் செம்பருத்திப் பூவுடன் சேர்த்து அரைத்து வழுக்கை மீது தடவி வர வேண்டும்.
17. அரிப்பு நீங்க கீழாநெல்லி இலைகளை அரைத்துத் தேய்த்து வர வேண்டும்.
18. ஊளைச்சதையைக் குறைக்க அடிக்கடி சோம்பு நீர் பருக வேண்டும்.
19. சதைபோடுவதைத் தடுக்க அருகம்புல் சாறு, வாழைத்தண்டு சாறு, பூசணிச் சாறு இவற்றில் ஏதாவது ஒன்றை தொடர்ந்து சாப்பிடலாம்.
20. தேவையற்ற கொழுப்பு குறைய பூண்டு, வெங்காயம் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளவும்.
21. பற்கள் சுத்தமாகவும் உறுதியாகவும் இருக்க மாவிலையை பொடி செய்து பல் துலக்க வேண்டும்.
22. வியர்க்குரு மறைய சாதம் வடித்த கஞ்சியை அதன் மீது தடவி சிறிது நேரம் கழித்துக் குளிக்க வேண்டும்.
23. தீப்புண் ஆற காபி டிகாசனைப் புண் மீது தடவ குணமாகும்.
24. முக அழகு கூட அருகம்புல்லை நீர்விட்டு அரைத்து வடித்துப் பின் வெல்லம் தேய்த்து பருகி வர முக அழகு கூடும்.
25. கோதுமையை நல்லெண்ணையுடன் சமைத்து உண்ணக்கூடாது.
26. தலைவலி தீர டீ அல்லது காபியுடன் சிறிது எழுமிச்சைச் சாறு கலந்து குடிக்கலாம்.
27. இளமையும் வசீகரமும் உண்டாக மூக்கிரட்டை இலையை தொடர்ந்து சாப்பிடலாம்.
28. உடல் எடை குறைய கொள்ளு ரசம் சாப்பிடவும்.
29. சிறுநீரகம் பலப்பட ரோஜாப்பூ , கற்கண்டு, தேன் கலந்து வெயிலில் வைத்து 1 கிராம் சாப்பிடவும்.
30. பேசும் திறன் கூட தாமரை இதழ் தினம் ஒன்று சாப்பிடவும்.
தொகுப்பு: ஸ்ரீனிவாஸ், கோயம்புத்தூர்.
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.