ஒரு பூனையும் நாயும் சந்தித்துக் கொண்டன.
அப்போது பூனை நாயிடம், “நண்பனே, நீ இறைவனிடம் வேண்டிக் கொண்டே இரு. இறைவனிடம் தொடர்ந்து வேண்டினால் எலி மழை பொழியும் என்று என் வீட்டிலிருக்கும் பெரியவர்கள் கூறியிருக்கிறார்கள்” என்று சொன்னது.
அதைக் கேட்ட நாய் சிரித்தது.
பின்னர் அந்த நாய், “பூனையே, என் வீட்டிலும் பெரியவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்கள் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். இறைவனிடம் தொடர்ந்து வேண்டினால், எலும்பு மழை பொழியும். அதனைச் சாப்பிட்டு மகிழ்ச்சியோடு வாழலாம் என்று சொல்லியிருக்கிறார்கள்” என்றது.