அப்பாவுக்கு வயது 108. மகனுக்கு வயது 90.
இருவரும் தினசரி காலை முதல் மாலை வரை வயலில் வேலை செய்வர்.
அப்பா முன் கோபி. சிறு தவறுகளுக்கு எல்லாம் மகனை அடிப்பார்.
ஆனால் மகன் எதிர்த்துக் கூட பேச மாட்டார்.
ஒரு நாள் கோபத்துடன் தந்தை மகனை அடித்த போது மகன் கண்ணீர் விட்டு அழுதார்.
“இத்தனை நாள் இல்லாது இன்று மட்டும் அழுத காரணம் என்ன?” என்று தந்தை கேட்டார்.
அதற்கு மகன், “அப்பா, இது வரை நீங்கள் அடித்த போதெல்லாம் வலி அதிகமாக இருக்கும். நானும் பொறுத்துக் கொள்வேன். இன்று நீங்கள் ஓங்கி அடித்தும் வலிக்கவில்லை. ஐயோ, உங்கள் உடம்பில் வலு குறைந்து விட்டதே என்று நினைத்துதான் அழுதேன்” என்றார்.
- சீனக்கதை