ஒரு மனிதன் இறந்த பிறகு கடவுளிடம் போனான்.
கடவுள், வாழ்க்கையில் அவன் கடந்து வந்த பாதையைக் காண்பித்தார்.
அதில் நான்கு காலடிச்சுவடுகள் இருந்தன.
“நீ போன இடங்களில் எல்லாம் நான் கூட வந்திருக்கிறேன் பார்”என்றார் கடவுள்.
ஆனால் நடுவில் கொஞ்ச தூரம் இரண்டு காலடிச்சுவடுகள் மட்டுமே இருந்தன.
மனிதன் சொன்னான், “துன்பத்தில் மட்டும் என்னைத் தனியாகத் தவிக்க விட்டு விட்டாயே, இறைவா!''
சிரித்துக் கொண்டே கடவுள் சொன்னார், “அந்த இரண்டு காலடிச்சுவடுகளும் என்னுடையவை. உன்னால் அத்துன்பத்தைத் தாங்க முடியாததால் நான் உன்னைச் சுமந்து கொண்டு சென்றேன்”