கிருஷ்ணர் முன்பு காதல் லீலை!
அது ஒரு கிருஷ்ணன் கோவில். அந்த கோவிலில் அர்ச்சகராக இருந்த ஒருவருக்கு காதலி ஒருத்தி இருந்தாள். அவள் காதலனான அர்ச்சகரை பார்க்கும் பொருட்டு தினமும் கோவிலுக்கு வந்து விடுவாள். அப்போது, பகல் நேரம் என்று பாராது இருவரும் கொஞ்சி மகிழ்வார்கள்.
இரவும் இவர்களது காதல் லீலை தொடர்ந்தது. பக்தர்கள் எல்லோரும் போன பிறகு கோவில் கருவறையிலேயே இருவரும் செக்ஸ் வைத்துக் கொள்வார்கள். இது அடிக்கடி தொடர்ந்தது.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த கிருஷ்ணர் ஒருநாள் அந்த அர்ச்சகரது கனவிலேயே வந்துவிட்டார்.
"என்ன பக்தா! நான் இருக்கிறேன் என்று பாராமல் ஏன் உன் லீலைகளில் ஈடுபடுகிறாய்? வேறு எங்கேயாவது அதை வைத்துக்கொள்ளலாமே..." என்றார்.
அதற்கு அர்ச்சகர், "கிருஷ்ணா! நீ இல்லாத இடம் ஏது? ஒருவேளை அப்படியரு இடம் இருக்கிறது என்றால், அதை நீயே எனக்கு அடையாளம் காட்டு" என்றார் அர்ச்சகர்.
இந்த அர்ச்சகர் வேறு யாருமல்ல... நாராயணீயம் பாடிய நாராயண பட்டாத்ரீதான்...!
- கண்ணதாசன் எழுதிய புத்தகம் ஒன்றிலிருந்து
தொகுப்பு: நெல்லை விவேகநந்தா
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.