யார் உயர்ந்தவர்?
கொடைவள்ளல் ஹாத்தீம் தாயிடம், “தங்களைக் காட்டிலும் உயர்ந்த மனிதரைத் தாங்கள் பார்த்ததுண்டா?” என்று சிலர் கேட்டனர்.
ஹாத்தீம் தாய் சொன்னார், “உண்டு. ஒரு நாள் நாற்பது ஒட்டகங்களை அடித்து விருந்து வைத்தேன். அன்று பாலைவனத்தில் ஒருவன் விற்குச் சுள்ளி பொறுக்கிக் கொண்டிருந்ததைப் பார்த்து அவனிடம் விருந்துக்கு வராத காரணம் கேட்டேன். அவன் சொன்னான், 'எவன் தன சொந்தக் கைகளினால் உழைத்து உண்கிறானோ, அவன் பிறர் தரும் விருந்தை எதிர் நோக்கிக் கொண்டிருக்க மாட்டான்' என்று... அந்த ஏழை தான் என்னைக் காட்டிலும் உயர்ந்தவன்”
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.