புத்தர் ஒரு முறை தனது சீடர்களுடன் ஒரு ஊருக்குள் சென்றார்.
அந்த ஊர் மக்கள் பல்வேறு பலகாரங்களைக் கொண்டு வந்து அவரை எடுத்துக் கொள்ளச் சொன்னார்கள்.
ஆனால் அவரோ, எதையும் எடுத்துக் கொள்ளாமல் புன்முறுவலோடு போய்விட்டார்.
அடுத்த ஊர் வந்தது.
அந்த ஊர் மக்களோ புத்தரை வாய்க்கு வந்தபடி திட்டினர்.
அப்போதும் அவர் புன் முறுவலோடு சென்று விட்டார்.
ஒரு சீடர் கேட்டார், “சுவாமி,அவ்வளவு பேர் அவதூறாகப் பேசினார்களே, பதிலுக்கு ஒரு வார்த்தை கூடப் பேசாமல் வந்து விட்டீர்களே? உங்களால் எப்படி முடிகிறது?”
அதற்குப் புத்தபிரான் சொன்னார், “நாம் முதலில் சென்ற ஊர் மக்கள் கொடுத்த பலகாரம் எதையும் ஏற்கவில்லை அல்லவா?அதே போலத்தான் இந்த ஊர் மக்கள் கொடுத்ததையும் நான் ஏற்கவில்லை. அங்கே வயிறு ஏற்றுக் கொள்ளாததை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. இங்கே மனம் ஏற்றுக் கொள்ளாததை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. அவ்வளவுதான்''