உடல் நிலை சரியில்லாமல் எழுதிக் கொண்டிருக்கலாமா?
பிரபல எழுத்தாளர் பிரேம் சந்த் உடல் நிலை மிகவும் குன்றிய நிலையிலும் சிரமத்துடன் எழுதிக் கொண்டே இருந்தார்.
ஒருநாள் பொறுக்க முடியாத அவர் மனைவி, ''உங்கள் உடல் நலம் சரியில்லாத இந்த நிலையிலும் எழுத் வேண்டுமா? சுவர் இருந்தால் தானே சித்திரம் எழுத முடியும். உங்கள் உடல் நலத்தையும் கொஞ்சம் கவனிக்கக் கூடாதா?''என்று கேட்டார்.
பிரேம்சந்த் அமைதியாகப் பதில் கூறினார், ''விளக்கு ஒன்று ஏற்றி வைத்தால், அதனுடைய கடமை அந்த இடத்திற்கு வெளிச்சம் தருவதுதான். எண்ணெயும் திரியும் எவ்வளவு காலத்திற்கு இருக்கிறதோ, அவ்வளவு காலமும் அது ஒளி வீசிக் கொண்டுதான் இருக்கும். எண்ணெயானது தீர்ந்தவுடன் அவ்விளக்கு தானே அணைந்துவிடும்''
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.