ஒரு ஊரில் சண்டைக்கார பாட்டி ஒருத்தி இருந்தாள்.
அவளிடம் பேசும் யாரையும் அவள் சண்டைக்கு இழுக்காமல் விட்டதில்லை.
இதனால் மனம் நொந்து போன அந்த ஊர் மக்கள் ஒன்று கூடிப் பேசி, அந்தப் பாட்டியிடம் யாரும் நாளை முதல் பேசக் கூடாது என்று முடிவு செய்தனர்.
மறுநாள் அந்த பாட்டியிடம் யாரும் பேசவில்லை.
பாட்டிக்கு கோபம் தாங்க முடியவில்லை.
இரவானதும் எங்கே பாட்டியிடம் பேச்சு கொடுத்து மாட்டிக் கொள்வோம் என்று அருகில் உள்ள பெண்கள் வீட்டை அடைத்துவிட்டு வீட்டுக்குள்ளேயே இருந்தனர்.
பாட்டிக்குக் கோபம் கோபமாக வந்தது.
வீட்டின் உள்ளே சென்ற பாட்டி, திடீரென்று ஒரு பெரிய பாத்திரத்தையும் நெருப்பும் உள்ளே இருந்து எடுத்து வந்து வீட்டின் முன்னே அமர்ந்து அடுப்பு மூட்டிப் பாத்திரத்தை வைத்து அதில் மண்ணை எடுத்து கொட்டி டர் டர் என வருக்க ஆரம்பித்தாள்.
சப்தம் கேட்டு அருகில் உள்ள பெண்கள் தங்கள் வீட்டின் ஜன்னல் கதவைத் திறந்து கொண்டு வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர்.
பாட்டி மண்ணை வருப்பதைப் பார்த்து ஆர்வம் தாங்க முடியாமல், "ஏ பாட்டி, இந்த அர்த்த ராத்திரியில் மண்ணை எதுக்கு வருக்குற?" என்று கேட்டனர்.
அவ்வளவு தான் பாட்டி வரிஞ்சு கட்டிக்கொண்டு எழுந்து வந்து, "அடியே, நா என் வீட்டுல மண்ண வருத்தா என்ன? இல்ல பன்ன வறுத்தா என்ன?" என்று சண்டைக்கு கிளம்பியது.
அனைவரும் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டு திரும்பினர்.
பாட்டி நிம்மதியாய் தூங்கினாள். பாவம் மத்தவங்களுக்குத்தான் தூக்கம் போச்சு!