ஒரு மன்னர் நகர்வலம் போய்க் கொண்டிருந்தார்.
ஒரு பிச்சைக்காரன் எதிரில் வந்து “பிச்சை கொடுங்க!” என்று கேட்டான்.
என்னுடைய அமைதியைக் கெடுக்காதே போ என்றார் மன்னர்.
அவன் சிரித்தான்.
“அரசே உங்கல் அமைதி கெடக்கூடிய நிலையில் இருந்தால் அது அமைதியே இல்லை!” என்றான் அவன்.
தன்னெதிரில் நிற்பது வெறும் பிச்சைக்காரன் இல்லை, அவர் ஒரு யோகி என்று தெரிஞ்சுக்கிட்டார் அரசர்.
“துறவியே, உங்களுக்கு என்ன வேண்டும் என்றாலும் கேளுங்கள். நான் தருகிறேன்” என்றார் மன்னர் .
மறுபடியும் அந்தத் துறவி சிரிக்கிறார்.
“அரசே உங்களால் முடியாததெல்லாம் கொடுக்க முடியும் என்று சத்தியம் செய்யாதீர்கள்” என்றார் துறவி.
இவர் என்ன இப்படி சொல்கிறார்? என்றபடி நகர்வலத்தைப் பாதியில் நிறுத்தி விட்டு, அவரை அரண்மனைக்கு அழைத்துச் சென்றார் அந்த மன்னர்.
“துறவி தன்னிடம் உள்ள பிச்சைப் பாத்திரத்தை நீட்டினார், எனக்கு இது நிறைய பொற்காசுகள் வேண்டும்” என்று சொன்னார் அந்தத் துறவி.
“இவ்வளவுதானா?” என்று கூறிவிட்டு ஒரு பெரிய தாம்பாளம் நிறையப் பொற்காசுகள் வரச்செய்து பிச்சைப் பாத்திரத்தில் போடச் செய்தார்.
பொற்காசுகள் போடப் போட உள்வாங்கிக் கொண்டே இருந்தது. அரசாங்க கஜானாவேக் காலியானது.
அதனைக் கண்ட மன்னர் துறவியின் காலில் விழுந்து, “என்னால் இதை நிரப்ப இயலவில்லை, என்னை மன்னியுங்கள்” என்றார்.
அப்போது அந்தத் துறவி சொன்னார்:
“மன்னா, இந்தப் பாத்திரத்தை உங்களால் மட்டுமல்ல, வேறு எவராலும் நிரப்ப முடியாது. ஏனென்றால் இது பேராசையால் இறந்து போனவனின் மண்டை ஓடு”