எட்வர்ட் ஹப்பர்ட் என்பவர் ஒரு கலைக் கண்காட்சியில் ஒரு அழகான ஓவியத்தைப் பார்த்து ரசித்து மிகவும் பரவசப்பட்டுக் கொண்டிருந்தார்.
அருகிலிருந்த அவருடைய நண்பர், ''இந்த மாதிரி ஓவியங்கள் மிகவும் விலை உயர்ந்தவை. இவற்றை வாங்க உனக்குத் தகுதி இல்லை என்று எனக்குத் தெரியும். இந்த நிலையில் பெரிதாக இந்த ஓவியத்தைப் பார்த்துப் பரவசப்படுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது?' 'என்று கேட்டார்.
அதற்கு ஹப்பர்ட் சொன்னார்:
''பொருட்களுக்கு சொந்தக்காரனாக இருந்தும் அவற்றை அனுபவிக்க, ரசிக்கத் தெரியாத மனநிலையை விட, தன்னிடம் இல்லாத பொருட்களையும் அனுபவிக்கத் தெரியும் மனநிலை கொண்டிருப்பது மிகச் சிறந்தது''